இரவு மணக்கோலத்தில் கேசுவலாக போட்டோ ஷூட்... காலையில் திருமணத்தை நிறுத்தி களேபரம்... கல்யாண மண்டபத்தை கதிகலங்க செய்த மணப்பெண்

திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு மாதம் முன்பு கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷீலா என்பருடன் நிச்சயம் செய்யப்பட்டது.

இரண்டு மாதமாக இருவரும் போனில் பேசி பழகி வந்துள்ளனர். திருமணத்துக்காக மண்டபம் பேசி, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தது. மணப்பெண்ணும், மணமகளும் பரஸ்பரம் பேசிக்கொண்டு இருந்ததால், இரு குடும்பத்தாரும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளனர். 

இன்று காலை திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்த நிலையில், இருவீட்டாரும் நேற்றே மண்டபத்துக்குக்கும் வந்து இருக்கிறார்கள். மணமகனும், மணமகளும் மிக மகிழ்ச்சியாக போட்டோஷூட்டும் நடத்தினர். 

விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில், கல்யாணகளை கட்டி உற்சாகம் பொங்கிய திருமண மண்டபம், மணப்பெண் செய்த செயலால் இன்று காலை சோகமயமாக மாறிவிட்டது. 

முகூர்த்த நேரம் நெருங்கிய வேளையில், மணமகன் தாலிகட்டுவதற்கு வந்தபோது, தடாலடியாக மணமகனை தள்ளிவிட்டு, தாலியை பிடுங்கி வீசி திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண் ஷீலா. இதனால் திருமண மண்டபத்தில் இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். 

 தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என தெரிவித்த மணப்பெண் ஷீலா  காரணத்தை கூறாமல் தனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்று மட்டும் தெரிவித்ததால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. மணமகன் கண்ணீர் விட்டு அழுத நிலையில் மணமகனின் உறவினர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.  

ஆனால் இருதரப்பும் சமாதானம் பேசிமுடித்ததால் வழக்குப்பதியவில்லை. 

மணமகனுடன் இரண்டுமாதமாக போன் பேசி வந்ததுடன்,  மணமேடை வரை மனக்காலத்தில் வந்து, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று விட்டு திடீரென்று  திருமணத்தை மணப்பெண் நிறுத்தியது மனிதத்தன்மையற்ற செயல் என்றும் முன்னரே கூறியிருந்தால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என்று மணமகனின் உறவினர்கள் தெரிவித்தனர். 

Previous Post Next Post