ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், மல்லநாயக்கனூர், ஆதிமல்லம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா-


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், உக்கரம் கிராமம், மல்லநாயக்கனூர ஸ்ரீஆதிமல்லம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 29-ம் தேதி முளைப்பாரி போடுதலுடன்  துவங்கியது. கடந்த 7ம் தேதி வெள்ளிக்கிழமை, ஊர் பெரியோர்கள் மற்றும் பொது மக்கள், புண்ணிய நதி யாம் பவானி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 8-ம் தேதி அன்று (சனிக்கிழமை)மதியம்1மணியளவில்,ஊர் பெரியவர்களால், ஸ்ரீ ஆதி மல்லம்மாள் கோவில் கிணற்றில் இருந்து, புண்ணிய தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் சுவாமி எடுத்து தானியத்தில் வைத்து,கம்பளத்தார்வம்சமுன்னோர் கள் செய்த வழிபாட்டு முறையில், சாமி வழிபாடு நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வாக,  இன்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள், 
ஸ்ரீ ஆதிமல்லம்மாள்  கோவில் கும்பாபிஷேக விழா, நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஆதிகால தொட்டிய நாயக்கர் சமுதாய வழிபாட்டு முறையில், கோபுர கலசங்களுக்கு, சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேக விழா,  சீரும் சிறப்பு மாக நடைபெற்றது.  அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன், கோவிந்தா, கோவிந்தா என கரகோசம் எழுப்பினர்.

அப்போது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, சாமிக்கு சிறப்பு ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு,கோபுர தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், கோவில் விழா கமிட்டியரால், சாமி பிரசாதம் மற்றும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.



Previous Post Next Post