கூட்டத்தில்,ஈரோடு மாவட்ட ஊராட்சி களின் உதவி இயக்குனர் உமாசங்கர் சிறப்பு பார்வையாளராக, பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தைப் பற்றியும், அரசின் வளர்ச்சி திட்டங்கள் பற்றியும், விரிவாக எடுத்துக் கூறியும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற,பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் பேசினார்.
கூட்டத்தில்,சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமை காவலர், பொது மக்களுக்கு காவல்துறை மூலம் வழங்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும்,போதை மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கிராமசபை கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலு வலர் (கிராம ஊராட்சி) சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பாயாள்,ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிசாமி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், எம். வடிவேலு, கிருஷ்ண மூர்த்தி, சுகுமார், பெரியசாமி, வசந்தி, குருநாதாள், கதிரி, சாவித்திரி, ரத்னா, வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு மற்றும் ரங்க ராஜ், தங்கராஜ், லிங்கராஜ் ஆகி யோரும், ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, தகுதி உள்ள 32 பயனாளிகள் புதிதாக வீடு கட்டுவதற்கும், ஏற்கனவே கட்டப்பட்ட பழைய தொகுப்பு வீடுகளுக்கு. பழுது பார்த்தல் பணிக்கு 47 பயனாளிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, கிராம சபா வில் அங்கீகரிக்கப்பட்டது,, மேலும் கொமார பாளையம் ஊராட்சிக்குட் பட்ட குமரன் கரடு பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் 80-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க, கோபி வருவாய்
கோட்டாச்சியரிடம் மனு சமர்ப்பித்தல் சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நிறைவாக ஊராட்சி செயலர் சர்வேஸ்வரன் நன்றி கூறினார்.