தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஜாதியோடு அனைத்து மத அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

தமிழகத்தில் *பள்ளி, கல்லூரிகளில் ஜாதியோடு அனைத்து மத அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும்!* *சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !* 
 தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவினை தமிழக அரசு கடந்த ஆண்டு அமைத்து அதன் பரிந்துரை அறிக்கை தற்பொழுது பெறப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். பள்ளிப் பெயர்களில் உள்ள ஜாதிய அடையாளங்கள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றும், பெரும்பான்மை ஜாதி உள்ள பகுதிகளில், அதே ஜாதியைச் சார்ந்த அதிகாரிகளையும் ஆசிரியர்களை அப்பகுதிகளில் நியமிக்க கூடாது என்றும், வருகை பதிவேட்டிலும் ஆசிரியர்கள், மாணவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஜாதியை குறிப்பிட்டு எக்காரணம் கொண்டும் கருத்துக்களை கூறக்கூடாது என்றும், மாணவர்களின் கைகளில் ஜாதிய வண்ணக் கயிறுகள், அடையாள மோதிரங்கள் அணிவதை தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பி டப்பட்டிருப்பதை அனைவரும் வரவேற்போம். அதேசமயம் நெற்றியில் திலகம் இடுவதையும் தடை செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அப்படி என்றால் சில மதம் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் மத அடையாள உடைகளை அணிந்து வருவதையும், பெண் ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்த மத நிற ஆடையை அணிந்து வருவதையும் தடை செய்ய முடியுமா? ஆகவே ஜாதியோடு நிறுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் மதத்திற்கும் தாவி சென்றிருப்பது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைகிறது. சந்துரு அறிக்கையை அப்படியே ஏற்பது என்றால் மதத்தின் அடிப்படையில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இப்படிப்பட்ட தடைகளை விதிக்கவும் தமிழக அரசு தயங்கக்கூடாது. அதற்கான பரிந்துரையையும் சந்துரு சுட்டிக்காட்டி இருந்தால் மேலும் நடுநிலையுடையதாக இருந்திருக்கும். ஆகவே ஜாதி மத அடிப்படையிலான அனைத்துவித சூழல்களையும் மீண்டும் மறு ஆய்வு செய்து தேவையான திருத்தங்களுடன் ஆய்ந்து அறிந்து சிறந்த முடிவினை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் வாழும் அனைத்து நடுநடையாளர்களும் எதிர்பார்க்கிறார்கள். அப்பொழுதுதான் அனைவருக்குமான அரசு என்பது பொருத்தமாக அமையும் என்று சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post