அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை எதிரொலிக்கும் கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் அரசால், அவ்வப் போது அறிவிக்கப்படும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். அதேபோல், அரசின் அறிவிப்பின்படி, கலைஞரின் கனவு இல்ல திட்டம் தொடர்பான, சிறப்பு கிராம சபை கூட்டம், மாக்கினாங்கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு.கே. ஈஸ்வரன்தலைமையில்.நடைபெற்றது
கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சாமி கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்தும்,பழுதடைந்த அரசு வீடுகள் பராமரிப்பு குறித்தும், அரசு மேற்க் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.கடத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் ஊராட்சி பகுதியில், போதை ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் அதன் தீங்கு பற்றிய விழிப்புணர்வு குறித்து, பொதுமக்களிடம் பேசினார்.
கூட்டத்தில்,ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் பண்ணாரி , சுக்கான் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கிராம சபை கூட்டத்தில்,ஊராட்சி மன்ற தலை வரிடம் பொதுமக்கள் மனு அளித்த னர். மனுக்களின் மீது உரிய நடவடி க்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் அம்மு. கே. ஈஸ்வரன் உறுதிஅளித்தார்.மேலும் கலைஞரின் இல்ல திட்டத்திற்கு, தகுதி வாய்ந்த மற்றும் சேதமடைந்த அரசு வீடுகளை பராமரிக்கும் மனுக்களும், மொத்தம் 24 மனுக்கள் கிராம சபையில், பரிந்துரைக்கப்பட்டு அரசுக்கு அனுப்ப ப்பட்டன. நிறைவாக மாக்கினாங் கோம்பை ஊராட்சி மன்ற செயலாளர் குமார் நன்றி கூறினார்.