திமுக மாநில விவசாய அணி சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நிறைவு விழா 1 லட்சம்பொதுமக்கள் பயனடைந்தனர் என மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி தகவல்
ஈரோடு மாவட்டம், கோபி ல. கள்ளிப்பட்டி பிரிவில் மாநில விவசாய அணி திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்த நாள் விழா மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி தலைமையில் நடைபெற்றது.கடந்த மாதம் 5ம் தேதி அன்று கோடை வெயில் காலத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க தலைமைக் கழகத்தில் வேண்டுகோளுக்கிணங்க நீர்மோர், வெள்ளரி, நுங்கு, ஈர துண்டு ஆகியவற்றை இலவசமாக வழங்கி அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து நேற்றுடன் ஒரு மாத காலம் நிறைவு பெறுகிறது.இந்த ஒரு மாத காலத்தில் 13ஆயிரம் லிட்டர் தயிர் பயன்படுத்த பட்டு 1லட்சம் பேர்களுக்கு மேல் பயனடைந்தனர்.இந்த நிகழ்வு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது.அதனை யொட்டி பொதுமக்கள் மற்றும் திமுக மாநில, மாவட்ட, பேரூர், ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கும் விவசாய அணி சார்பாகவும், நகர கழக திமுக சார்பில் நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் ஆகியோர் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.மேலும் நீர் மோர் பந்தல் நிறைவு விழாவில் சர்க்கரை பொங்கல் வழங்க பட்டு, பணியாற்றிய பெண்மணி காயத்ரிக்கு ஊக்க தொகையாக ரூ.5000 வழங்கப்பட்டது. இதில்மாவட்ட மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மூன்னாம் பள்ளி மணி, தொ.மு.ச.சரவணன்,வார்டு செயலாளர் செந்தில்குமார்,முன்னாள் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு துணை அமைப்பாளர்தென்றல் ரமேஷ்,குமார சீனிவாசன், பூபதி,பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி கள்ளிப்பட்டி மதிவாணன், விஸ்வநாதன்,ப்ரேம், சுதாகர், கோபிநாத், சம்பத், பரணி,பாலு, சிதம்பரம், கோதாண்டபாணி, மணிவண்ணன் உட்பட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.