ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

 


கோபி,வேட்டைக்காரன் கோவில், "வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும்" ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், மொடச்சூர் கிராமம்,வேட்டைக்காரன் கோயில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாகாளியம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் புனர் தார்னா ஜீர்ணோர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா





 நடைபெற்றது.விழாவானது கடந்த 13ஆம் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை,மகா கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம்,  கோ பூஜை, தன பூஜையுடன் தொடங்கி,14ஆம் தேதி மாலை வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம்,முதல் கால யாக பூஜை நடந்தது, 


அதனையடுத்து 15 ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜை ,விசேஷ சந்தி, வேதிகார்ச்சனை, மண்டப அர்ச்சனை,அரிசி கூடை சீர் வரிசை எடுத்து வருதல், சுவாமிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்றுவரை ஞாயிறு 16 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நாடி சந்தானம், பூர்ணாகுதி, மஹா தீபாராதனை நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து காலை 7.40 க்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு காலை 8 மணிக்கு விமான கலசங்களுக்கு கனககிரி,பட்டாலி ஆதீனம், வேத ஆகம சிரோண்மணி சத்யோஜாத ஶ்ரீலஸ்ரீ எம்.எஸ்.சிவாசலபதி சிவாச்சாரியார்புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்,பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து மகா அபிஷேகம் தச தரிசனம் மகாதீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானம் சாப்பிட்டு சென்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகளைவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள்சிறப்பாக செய்திருந்தனர். 


எம்.மாரிச்சாமி,

செய்தியாளர், 

தமிழ்அஞ்சல் நாளிதழ்,

9080602161



Previous Post Next Post