தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கொங்கு மண்டல பொதுக்குழு பெருமாநல்லூர் பர்வத வர்த்தினி மஹாலில் தொடங்கியது. தலைமை செல்வம் திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர், வரவேற்புரை மணியன் பூஜாரி பேரவை ஈரோடு மாவட்ட இணை அமைப்பாளர், ஆசியுரை ஸ்ரீ ராஜ தேவேந்திர சுவாமிகள் இந்திரேஸ்வரா மடாலயம் கோவை சிறப்புரை சோமசுந்தரம் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணைப் பொதுச் செயலாளர் இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கியவர்கள் அத்திக்கடவு சுப்பிரமணியம் சிவமந்திர சுவாமிகள் திருப்பூர் மாவட்ட செயல் தலைவர் குமரவேல் பூசாரி பேரவை மண்டல அமைப்பாளர் நரசிம்மன் கிருஷ்ணகிரி கோட்ட செயலாளர் மஞ்சுநாத் கிருஷ்ணகிரி கோட்டத் தலைவர் லாலா மணிகண்டன் கோவை கோட்ட கொள்கை பரப்பு செயலாளர் கோபால் பூஜாரி பேரவை கோவை கோட்ட இனை அமைப்பாளர் ரங்கசாமி மாவட்ட இணை அமைப்பாளர் சிவ மகேந்திரன் பூஜாரி பேரவை மாநில செயலாளர் கோவிந்தராஜ் பூஜாரி பேரவை கோவை கோட்ட என அமைப்பாளர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஸ்ரீராம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1.திருப்பூர் அங்கேரிபாளையம் நூற்றாண்டுகள் கடந்த பட்டத்தரசி அம்மன் கோவிலை இடிப்பததை அரசு உடனடியாக கைவிட வேண்டும் 2 .கிராம கோவில்களில் தமிழக முழுவதும் நடைபெறும் விழாக்களின் போது மது கடைகளை மூட வேண்டும் என்றும் விழாக்களில் தகுந்த பாதுகாப்பினை காவல்துறை தருவதோடு சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை தடுக்க வேண்டும் 3 .கிராம கோவில் பூசாரிகளுக்கு தனது தேர்தல் அறிக்கையில் திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிராம கோவில் பூசாரி அனைவருக்கும் ஊக்கத்தொகை தொகையும் ஓய்வூதிய தொகையும் தருவதாக உறுதியளித்து நிலையில் மூன்று ஆண்டுகள் ஆகியும் தராததால் உடனடியாக ஊக்கத்தொகை தருவதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும் 4.கிராம கோவில் பூசாரிகளுக்கு கடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 2000-வது ஆண்டில் நல வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்ததில் உடனடியாக நலவாரியம் அமைத்தார் ஆனால் அதனுடைய செயல்பாடுகள் இல்லாததால் தற்போது அவரது தணையன் ஆட்சியிலாவது தந்தை போல் இல்லாமல் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்துவதோடு கிராம பூசாரிகளுக்கு உண்டான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் 5. கேரளா அரசு அமராவதி ஆற்றுக்கு வரும் தண்ணீரை தடுத்து தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் சிலந்தி ஆற்றில் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் 6. கோவை பகுதியில் தொடர் சோதனை நடப்பதால் அப்பகுதியில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் உட்பட இந்துஇயக்க முக்கிய நிர்வாகிகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் . 7. திருப்பூரில் சட்ட விரோதமாக வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் குடியேறி பல இன்னல்களை செய்து வருவதால் அவர்களை ஏற்கனவே சில பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது, ஆனால் முழுமையாக அவர்களை கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று இக்குழு சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் .இந்நிகழ்ச்சியில் கோவை நீலகிரி பொள்ளாச்சி மாவட்டம் திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் 250 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வேலுசாமி நன்றியுரை வழங்கினார்