அறம் சமூக சேவை அமைப்பு நிறுவனத்தலைவர் அறம் நிஷா மக்களவை சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று பேர் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் ஆர் எல் வி பேரவையில் இணைந்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த பிரபல சமூக சேவகியும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பிரபலமான அறம் நிஷா மற்றும் மக்களவை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஏனாம் தொகுதியை சேர்ந்த போசியா அராதாதி , கராஜர் நகர் தொகுதியை சேர்ந்த கலா சங்கர் மற்றும் மணவெளி தொகுதியை சேர்ந்த முருகன் ஆகிய நான்கு பேரும் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் மாஸ்கோ மற்றும் மாநில பொருளாளர் கோமதி தலைமையில் ஆர்.எல்.வி பேரவை நிறுவன தலைவர் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் ஆர்.எல்.வி பேரவையில் இணைய விருப்பம் தெரிவித்து ஆர்.எல்.வி பேரவையில் இணைந்தனர்.
பிரபலங்கள் இணைந்த நிகழ்ச்சி :அறம் நிஷா
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் அறம் சமூக சேவை அமைப்பின் நிறுவனத்தலைவர் அறம் நிஷா . இந்த அமைப்பின் மூலம் ஆதரவற்றோர், குடும்பத்தில் வறுமையில் இருப்பவர்கள், தெருவோரம் ஆதரவற்ற நிலையில் சாப்பாடு இல்லாமல் பசியால் வாடுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் , சுகாதார சீர்கேட்டால் உடல் நலம் பாதித்து இருப்பவர்களுக்கு மருத்துவ வசதி செய்துகொடுத்தும், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மளிகை மற்றும் காய்கறி பழங்கள் கொடுத்தும் பல சமூக பணிகளையும் மக்களுக்காக அறம் சமூக சேவை அமைப்பு மூலம் உதவி செய்து வருபவர் அறம் நிஷா அவர்கள் என்னை எனது இல்லத்தில் நேரில் சந்தித்து, புதுவையில் விரிவாக சமூகப்பணி செய்ய வேண்டும் என்று எண்ணுவதாகவும் அதற்காக தனது தலைமையில் நடத்தி வரும் அறம் சமூக சேவை அமைப்பை முழுமையாக கலைத்து விட்டு ஆர். எல். வி வையில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்த , அறம் நிஷா அவர்கள் தனது நிர்வாகிகளுடன் ஆர்.எல்.வி யில் தன்னை இணைத்து கொண்டார்.
போசியா அரதாதி ஏனாம் தொகுதி
நடைபெற்ற புதுச்சேரி மக்களவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ஏனாம் தொகுதியை சார்ந்த போசியா அறதாதி அவர்கள் கடந்த பல ஆண்டு காலமாக சமூக பணி செய்து ஏனாம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மக்கள் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தி வெற்றிக் கண்டவர். திமுக வில் இருந்து செயல் பட்டுவந்த போசியயா அரதாதி அவர்கள் நேற்றைய தினம் தன்னை ஆர்.எல். வி பேரவையில் இணைத்துக் கொண்டார்.
கலா சங்கர் காமராஜர் நகர் தொகுதியை சார்ந்த திருமதி. கலா சங்கர் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக மற்றும் அரசியல் பணியில் ஈடுபட்டவர். இரண்டு முறை சட்டமன்ற தேர்தலுக்கும், கடைசியாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கலா சங்கர் அவர்கள் கடந்த முறை உப்பளம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். திருமதி கலா சங்கர் அவர்களும் அவரது கணவர் த
சங்கர் அவர்களும் தங்களை ஆர்.எல்.வி பேரவையில் இணைத்து கொண்டனர்.முருகன் மணவெளி தொகுதியை சார்ந்த முருகன் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் , நடந்து முடிந்த மக்களவை தேதலில் சுயேசையாக போட்டியிட்டவர். பல ஆண்டு காலமாக சமூக பணியில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் மேற்கண்ட நான்கு பிரபலங்களும் ஆர்.எல்.வி பேரவையில் இணைந்தனர்.