தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையத்தில் குழப்பம்.!? -ஆட்சியர் விளக்கம்


 தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையத்தில் குழப்பம்.!? -ஆட்சியர் விளக்கம்

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி IV-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகளை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வட்டங்களில் அமைந்துள்ள 200 தேர்வு மையங்களில் மொத்தம் 58,373 விண்ணப்பதாரர்கள் 09.06.2024 அன்று முற்பகல் 09.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு எழுதவுள்ளனர்.

தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து அவரவருக்குரிய தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் முழு விவரங்களுடன், தேர்வு மையத்தின் பெயரும், முகவரியும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதில், சாத்தான்குளம் வட்டத்தில் S.S.N. Government Model Higher secondary School (சு.சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி) ல் அமைந்துள்ள தேர்வு மையத்தின் எண். 009 தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் மட்டும் 1-83 Ave Maria Park Pannamparai Junction Satankulam (TK), Thoothukudi District என தவறுதலாக பதிவாகி உள்ளது.

மேற்படி தேர்வு மையம் S.S.N. Government Model Higher secondary School (சு.சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி) ஆனது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், கொம்படிக்கோட்டை கிராமம், உடன்குடி - திசையன்விளை மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. தேர்வு மையம் எண்:009 இல் தேர்வு எழுத அனுமதிச் சீட்டு பெற்ற தேர்வர்கள் மேற்படி முகவரியில் அமைந்துள்ள தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றடைய ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி வருகின்ற 09.06.2024 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.00 மணிக்கு முன்னர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post