கோரிக்கை நிறைவேறியது மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் எரிவாயு தகன சுடுகாட்டில் 220 அடியில் போர்வெல் அமைப்பு தண்ணீர் பற்றாக்குறை நீக்கம் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நன்றி

கோரிக்கை நிறைவேறியது! *மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் எரிவாயு தகன சுடுகாட்டில் 220 அடியில் போர்வெல் அமைப்பு! தண்ணீர் பற்றாக்குறை நீக்கம்! சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நன்றி!** 

 மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் தகன எரிவாயு சுடுகாட்டில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இன்றி துக்க காரியத்திற்கு வருகின்றவர்கள் பெரும் அவதி உற்றார்கள். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை மீண்டும் இயக்கிடவோ அல்லது புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை வைத்திருந்தார். அக்கோரிக்கை செய்தி கடந்த தினத்தந்தி 10-6-2024 மற்றும் தினகரன் நாளேட்டில் 11-6-2024 ல் மயிலாடுதுறை எரிவாயு சுடுகாட்டில் தண்ணீர் பற்றாக்குறை! இறுதி சடங்கு செய்ய முடியாமல் அவதி என்னும் தலைப்பில் செய்தி வெளியானதை அடுத்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 220 அடி ஆழத்தில் போர்வெல் புதிதாக அமைக்கப்பட்டு தற்பொழுது முழுமையாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பிரேதங்களை இறுதிச் சடங்குகளை செய்து எரியூட்டும் துக்க நிகழ்ச்சிகளுக்கு வருகின்றவர்களும் உறவினர்களும் சம்பிரதாயங்களை நிறைவேற்றவும், நிகழ்ச்சி முடிந்த பிறகு குளிப்பதற்கான தண்ணீர் வசதியும் தற்பொழுது கிடைக்கப்பெற்றதால் நிம்மதி அடைந்துள்ளார்கள். இதற்கு கோரிக்கையை முன்வைத்து முழு முயற்சி மேற்கொண்ட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ் செய்தி நிறுவனத்திற்கும் செய்தியாளர்களுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post