சத்தியமங்கலம் அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்தேக்க பகுதியில், உயிருக்கு போராடிய ஆண் யானை சிகிச்சை பலனின்றி மரணம்.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில், பெரும்பள்ளம் நீர் தேக்க அணை உள்ளது. இந்த பகுதியில், கடந்த பத்து நாட்களாக, 30 வயது மதிக்க மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, உடல்நலம் குன்றிய நிலையில் அந்த பகுதியிலேயே, நடமாடி வந்துள்ளது. அங்குள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து, பயிர்களை மேய்வதும், நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் அருந்தியும் நடமாடி வந்துள்ளது. மேலும் அங்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற கால்நடைகளையும் துரத்தி அடித்து வந்தது. மிகவும் உடல்நலம் குன்றி நடமாடி வந்த அந்த ஆண் யானை, இன்று காலை, திடீரென அணையின் நீர் தேக்க பகுதியில் படுத்து விட்டது. உடனடியாக, கிராம மக்கள் சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிசாமி, கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட 15-க் கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர் கள் சம்பவ இடத்திற்கு வந்து, யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள். 

ஆண் யானைக்கு குளுக்கோஸ், மருந்து மற்றும் குடிப்பதற்கு தண்ணீரை கொடுத்தும், யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கை, கால்களை அசைத்து வரும் அந்த ஆண் யானை,  எழ முடியாமல் படுத்திருந்தது. ஆண் யானையின் உடல் நிலை, மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையில் இருந்து வந்தது..இருப்பினும் வனத் துறையினர் மற்றும் கால்நடை துறை யினர் தொடர்ந்து, யானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் ஆண் யானை உயிரிழந்தது. யானை உயிரிழந்த நிலையில், வனத்துறை கால்நடை மருத்துவர்கள் குழு யானையை, சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்த பின்னர், வனத் துறையினர் இறந்த யானையின் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்தனர்.

Previous Post Next Post