மாநில அளவிலான யுவா கபடிப்போட்டியில் திருப்பூர் ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அணி பங்கேற்பு

 மாநில அளவிலான யுவா கபடிப்போட்டியில் திருப்பூர் மாவட்ட ஆண்கள் அணி பங்கேற்பு... கபடிக்கழகம் சார்பில் சீருடைகள், உபகரணங்கள் வழங்கப்பட்டது.


மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க திருப்பூர் மாவட்ட ஆண்கள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வழியனுப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.
சென்னை, பொன்னேரியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் வளாகத்தில்,  25 வயதுக்கு உட்பட்ட சீனியர் பிரிவு ஆண்களுக்கான மாநில அளவிலான யுவா கபாடிப்போட்டிகள்  நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்கின்றனர். ஏ பிரிவு மற்றும் பிபிரிவு என இரு பிரிவுகளில் தலா எட்டு அணிகள் வீதம் கலந்து கொள்கின்றன. லீக் முறைப்படி நடைபெறும் போட்டிகள் யாவும் செயற்கை தளத்தில் நடைபெறுகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 20 லட்சம் உள்பட பரிசுக்கோப்பைகள், சான்றிதழகள் வழங்கப்பட உள்ளன.
இந்த போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.  தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் பொருளாளராகவும், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் செயலாளராகவும் இருக்கிற ஜெயசித்ரா சண்முகம்  திருப்பூர் மாவட்ட அணியை நடத்துகிறார். பயிற்சியாளர் தண்டபாணி, மேலாளர்வினோத் அணித் தலைவர் கன்னீஸ்வரன் தலைமையில் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த வீரர்களுக்கு  விளையாட்டுச் சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்தின் தலைமை புரவலர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், புரவலர்கள் ரைஸ் பத்மநாபன், பிரேமா மணி, சேர்மன் கொங்கு வி.கே. முருகேசன், துணை சேர்மன் முருகானந்தம், செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி, துணைத் தலைவர்கள் ராமதாஸ் நாகராஜ், பிர்லி கந்தசாமி, லீட்ஸ் நடராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சு.சிவபாலன், கௌரவ உறுப்பினர்கள் கணேஷ் டைஸ் ஸ்ரீதர், தம்பி வெங்கடாசலம்,  துணைச் செயலாளர் செல்வராஜ், நடுவர் குழு சேர்மன் நல்லாசிரியர் முத்துசாமி, நடுவர் குழு கன்வீனர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
Previous Post Next Post