கனமழை எதிரொலி- உயரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்-விவசாயிகள் மகிழ்ச்சி.


ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் அருகே,பவானிசாகர்அணைஉள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய மண் அணை ஆகும். மேலும், தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைகளில், இதுவும் ஒன்றாகும்.இந்தஅணையில்இருந்து, வெளியேற்றப்படும் நீர் ஈரோடு, திருப்பூர் கரூர் மாவட்ட மக்களுக்கு, குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2.07 இலட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களும் பயன்பட்டு வருகிறது. இங்கு  முறையே, அரக்கன் கோட்டை, தடபள்ளி வாய்க்கால் மற்றும் காலிங் கராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்கால் மூலம்,விவசாயநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணைக்கு, பவானி ஆறு மூலம் வரும் நீர்,பில்லூர் அணையில் சேமிக்கப்பட்டு,உபரிநீர் இந்த அணைக்கு வரும். மேலும், மேயாறு மூலமும் நீர்வரத்து வருகிறது.கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணை, நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக,பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து, அதிகரித்த வண்ணம் உள்ளது. 

பவானிசாகர் அணையின் மொத்த முழுகொள்ளளவான105அடிக்கு,  அணையின் நீர் மட்டம் தற்போது இன்று காலை 10 மணி நிலவரப்படி, 52.65 அடி உயரம் உள்ளது.தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில், நல்ல மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணை கடந்த 22ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, 46.19அடி உயர நீர் இருந்த நிலையில்,கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர் மட்டம் 6 அடி உயர்ந்து உள்ளது. தற்போது அணைக்கு, விநாடிக்கு 4082 கனஅடிநீர் வருகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

Previous Post Next Post