ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் பெரியகுளம் கனமழையால் நிரம்பி வருவதை பொதுமக்களுடன் பார்வையிட்ட பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி.சண்முகம்.
நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பின,
அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு இச்சிபாளையம் மற்றும் கெடாரை, சந்தன நகர் பகுதியில் பெய்த கனமழையால் குளங்கள் முழுமையாக நிரம்பி மழைநீர் வெளியேறி நம்பியூர் அருகே உள்ளஎலத்தூர் பெரியகுளம் 25 ஆண்டுக்கு பிறகு நிரம்பி வருகிறது.இந்த பெரியகுளம் ஆனது 100 ஏக்கர் 77 சென்டில் உள்ளது.எலத்தூர்,கண்ணாங் காட்டு பாளையம்,
கரட்டுப்பாளையம்,செட்டிபாளையம்,பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் உள்ளது.குளம்முழுமையாக நிரம்பி நீர்வழி பாதையில் வெளியேறும் அதனால் அப்பகுதி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் ஆலோசனையின் படி எலத்தூர் பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி சண்முகம்,பொதுமக்களுடன் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
இதில் 12 வது வார்டு துணைச் செயலாளர் சௌந்தர்ராஜன், முன்னாள் பேருர் கழக செயலாளர் ராசு,உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.