திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கவுசல்யா பால்பாண்டி தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறதுள்ளனர்.
மூன்று குழந்தைகளும் தலா 1.5,1.45,1.55 கிலோ எடையுடன்,குறைமாதத்தில் பிறந்து மூச்சு திணறலுடன் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் டிரிப்ளட் 2 ம் குழந்தை செயற்கை சிகிச்சை கருவியில் ஒரு வாரமும், மற்ற டிரிப்ளட் குழந்தைகள் சீபேப் சுவாச கருவியிலும் வைத்து ,குழந்தைகள் நலதுறை மருத்துவர் உமாசங்கர் தலைமையிலான பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள்,செவிலியர்கள் சிகிச்சையை அளித்தனர் .
குழந்தைகள் மூவரும் உடல் எடை கூடி தேறிய நிலையில் 25 நாட்கள் சிகிச்சை முடிவடைந்த நிலையில் பெற்றோரிடம் வீட்டிற்க்கு அனுப்பபட்டது. மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) முருகேசன் மருத்துவர்கள், பணியாளர்களின் சிறப்பான சிகிச்சையை பாராட்டினார்.