திருப்பூரில் பாரம்பரியமிக்க பள்ளியான நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 94.4 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவன் ஹபிபுர் ரகுமான் 600க்கு 571 மார்க் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். ராகுல் 558 மார்க் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். 557 மார்க் பெற்ற தர்ஷன் மூன்றாம் இடத்தையும், 555 மார்க் பெற்ற தினேஷ் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் 14 பேர் 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில்நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4 பேர், பொருளியல் பாடத்தில் 3 பேர், கணினி அறிவியல் பாடத்தில் ஒருவர், வணிகவியல் பாடத்தில் ஒருவர் 100க்கு 99 மார்க் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 19 பேர் கணக்குப்பதிவியலில் 18 பேர், ம் தமிழில் 15 பேர், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 15 பேர், கணினி அறிவியல்பாடத்தில் 8 பேர் பொருளியல் பாடத்தில் 6 பேர், நெசவுத் தொழில்நுட்பம் பாடத்தில் 2 பேர், ஆங்கிலம் ,கணிதம்,வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என 100க்கு 90க்கும் மேல் மார்க் பெற்றுள்ளனர். சாதனை மாணவர்களை தலைமை ஆசிரியர் பழனிசாமி பாராட்டினார்.