கோவை தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தினர் கோரிக்கைகளை ஏற்று உறுதியளிக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவு என அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு   கோரிக்கைகளை முன் வைத்த தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தினர் கோரிக்கைகளை ஏற்று உறுதியளிக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவு என அறிவிப்பு..

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் சங்கத்தின் நிர்வாகிகள் பழனிசாமி,மணிமாறன்,பால்ராஜூ தஞ்சை சிவா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..
தமிழ்நாடு முழுவதும் நடக்கும் திருவிழாக்கள், திருமணங்கள், அரசு, அரசியல் நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி விழாக்கள், தனியார் நிறுவன நிகழ்ச்சிகள் மற்றும் சுப ,மற்றும் துக்க  நிகழ்வு என அனைத்திற்கும்  தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் இந்த துறையில், நேரடி மற்றும் மறைமுகமாக 2 கோடிக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் உள்ளனர்.
நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகளுக்கு   எங்களுடைய கோரிக்கை மனுவை தெரிவிப்பதாகவும்,. கோரிக்கைகளை ஏற்று உறுதியளிக்கும் வேட்பாளர்களுக்கு எங்கள் ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தனர்..குறிப்பாக,
தமிழகம் முழுவதும் நடக்கும் சுப / அசுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம்,  சார்ந்த பலவகையான தொழிலில் ஈடுபட்டு வரும் எங்களின் தொழிலுக்கு மத்திய, மாநில அரசு விதித்துள்ள 18% GST வரியை குறைத்திட வேண்டுகிறோம்.
 சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கு உண்டான வேலைகளுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் வாகன சோதனை எனும் பெயரில் GST ரோந்து வாகனங்கள் மூலமாக E-Way Bill சம்பந்தமாக எங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை பரிசீலிக்க வேண்டுகிறோம்.எங்களது துறையில் பணியாற்றும் 25 லட்சங்களுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டுகிறோம்.
 மத்திய மாநில அரசுகள் வழங்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு சலுகைகளை மேற்படி தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.
அரசு சார்ந்த வங்கிகளில் எங்கள் தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்குவதில் உள்ள கடும் நிபந்தனைகளை தளர்த்திட ஆவணம் செய்ய வேண்டுகிறோம்.
எங்களது தொழில் நிறுவனங்கள் விபத்து, தீ விபத்து மற்றும் பேரிடர் காலத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய, மாநில அரசு தனி கவனம் செலுத்தி இழப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டுகிறோம். உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்…
Previous Post Next Post