*பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி அவர்களே என பாடி மோடியை விமர்சித்த பல்சமய நல்லுறவு இயக்க தலைவர்*
பிரதமர் மோடி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பற்றி கூறுவது வேடிக்கையாக உள்ளது எனவும்,.இதற்கு பழைய பாடலான பொய்யிலே பிறந்து பொய்யிலே பிறந்த புலவர் மெருமானே என்ற பாடலை , பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி அவர்களே என பாடி காட்டிய பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி..
கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர்,
நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் எனவும் அதன் காரணமாகவே பிரதமர் மோடி தோல்வி பயத்தில் டில்லி முதல்வரை கைது செய்வது போன்ற ஜனநாயக படுகோலை விஷயங்களை செய்து வருவதாக தெரிவித்தார்.மேலும் பா.ஜ.க.ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்க துறை, சி்.பி.ஐ.,வருமான துறை போன்றவற்றை வைத்து மிரட்டி மாநில கட்சிகளை பலமிழக்க செய்கிறது என்றார்..வரும் தேர்தலில் பா.ஜ.க.கூட்டணி வட மாநிலங்களிலும் மிகப்பெரிய தோல்வியை பெறுவது உறுதி என்று கூறிய அவர்,இந்தியா கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி புறுவது உறுதி என்றார்..தொடர்ந்து பேசிய அவர்,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியல்லை என்று கூறும் பிரதமர் மோடி ,கடந்த ஒரு வருடமாக மணிப்பூர் செல்லாததை சுட்டி காட்டிய அவர்,பா.ஜ.க.வடகிழக்கு மாநிலங்களில் போட்டியிடவே அஞ்சுவதாக குறிப்பிட்டார்..தமிழகத்தை பொறுத்த வரை தேர்தல் ஆணையமே தமிழகம் அமைதியாக இருப்பதாக கூறியுள்ளதை சுட்டி காட்டினார்..இந்திய நாட்டில் பி.எம்.கேர்ஸ் நிதி,,தேர்தல் பத்திரம் என மிகப்பெரிய ஊழலை பிரதமர் மோடி செய்துள்ளதாக கூறும் அவர்,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றி கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.இதற்கு பழைய பாடல் ஒன்றை பாடிய அவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே பிறந்த புலவர் மெருமானே என்ற பாடலை , பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி அவர்களே என பாடி காட்டினார்..