தூத்துக்குடி மாநகர் முழுவதையும்தொடர் தீவிர பிரச்சாரத்தால் திமுக வசமாக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி!
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை ஆதரித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி, வியாபாாிகள், பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகாித்து வருகிறார்.
பிரச்சாரம் செய்யும் இடங்களில் தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துவது, அவா்களது தொழில் மற்றும் நலம் குறித்து விசாரிப்பது என மக்களோடு மக்களாக கலந்து, பாமர மக்களின் உணர்வை புரிந்து அதற்கேற்றார் போல் இயல்பாகவும் எளிமையாகவும் வீதி வீதியாய் நடந்து சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார் மேயர் ஜெகன் பொியசாமி,
அந்த வகையில் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள், சுந்தரவேல் புரம், அம்பேத்கார் நகர் மெயின் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி மெயின் ரோடு, இன்னாசியார்புரம், அமொிக்கன் ஆஸ்பத்திாி சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பாதசாரிகள் உள்ளிட்டோரிடம் மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகாித்தார்.
இதில், திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் சக்கரைசாமி, வட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தெய்வேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்ட பிரதிநிதி பேச்சிமுத்து, வடக்கு மண்டல காங்கிரஸ் தலைவர் சேகர், முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் வட்ட பிரதிநிதி கண்ணன், முன்னாள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி பகுதி பிரதிநிதி பிரபாகர், முன்னாள் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் முத்துதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.