வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

 வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினை தீயணைப்பு துறையினர் மூலம் அணைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தசிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (06.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
வெள்ளலூர் குப்பை கிடக்கில் ஏற்பட்ட தீ விபத்தினை அணைப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தீயானது தற்பொழுது இரண்டு ஏக்கர் பரப்பளவில் பரவி உள்ளது. மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க தீயினை தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
தீ அணைப்பதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 11 தீயணைப்பு வானங்களும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தலா இரண்டு தீயணைப்பு வாகனங்களும் என மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தீயணைக்கும் பணிகளில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 8 கிட்டாச்சி மற்றும் 2 ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. தீயினை அணைப்பதற்கு 20 -க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. தீ மேலும் பரவாமல் இருக்க 2 டிரோன்கள் மூலம் கண்காணிக்கப் பட்டு வருகின்றது.
 இத்தீயினை நாளை (07.04.2024) மதியத்திற்குள் அணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.
Previous Post Next Post