தெலுங்கு மொழியில் பேசி, பொது மக்களை கவர்ந்த முன்னாள் சபாநாயகர். இரட்டைஇலை சின்னத்திற்கு, தீவிர வாக்கு சேகரிப்பு..


 நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட,பவானிசாகர்சட்டமன்றத்தொகுதி சத்தியமங்கலம் நகராட்சி பகுதி 25,17, 11,,3,2,1 ஆகிய வார்டு பகுதிகளான, கோவிந்தராஜபுரம்,, காசிக்காடு, குள்ளங்கரடு,jj நகர், பெரியகுளம், உதய மரத்துமேடு, தோப்பூர் காலனி பகுதிகளில்,தமிழக சட்டமன்ற முன் னாள் சபாநாயகரும்,அவிநாசி தொகு தி சட்டமன்ற உறுப்பினருமான ப.தன பால், அருந்ததியர் சமூக மக்கள் வசிக் கும் குடியிருப்பு களிலும், பிற பகுதி வாக்களர்களை நேரில் சந்தித்து, தனது மகன் லோகேஷ் தமிழ்ச்  செல்  வனுக்கு, இரட்டை இலை சின்னத் திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முன்னாள் சபாநாயகர் ப.தனபால் வாக்காளர்களிடம் தெலு ங்கு மொழியில், நான் சபா நாயகர் இருந்த போது, என்னை தொலைக் காட்சியில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். இன்று நான் நீலகிரி தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிற எனது மகன் லோகேஷுக்கு,மதுரை வீரனான எம்ஜிஆரின் சின்னமான, ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங் களை அள்ளித் தந்த, புரட்சித்தலைவி அம்மாவின் சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

தங்கள் தாய் மொழியில் பேசிய, முன் னாள் சபாநாயகரிடம், சகஜமாக பேசி ய வாக்காளர்கள், இரட்டை இலை சின்னத்திற்கே தங்களது வாக்கு என தெலுங்கில் பதில் அளித்தனர். மேலு ம் தங்கள் வார்டுகளின் நிலவும் பிரச் சனைகளை கோரிக்கையாக முன் வைத்து தீர்க்கவும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அப்போது உடன் இருந்த சட்டமன்ற உறுப்பின ரான அ. பண்ணாரி எம்.எல். ஏ.பொது மக்களின் நியாயமான கோரிக்கை களை, தான் நிறைவேற்றி தர உள்ள தாக உறுதி அளித்தார். முன்னாள் சபாநாயகரின் தேர்தல் வாக்கு சேகரி ப்பு நிகழ்ச்சியில், பவானிசாகர் எம். எல்.ஏ.அ.பண்ணாரி, முன்னாள் மாவ ட்ட ஊராட்சிக் குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம், அதிமுக சத்தி நகரச் செய லாளர் ஓ.எம்.சும்பிரமணியம், சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என். சிவராஜ், முன்னாள் எம்.பி.காளியப் பன், முன்னாள் எம்.எல்.ஏ.ஏ.டி.சரசு வதி,அதிமுக மாவட்ட நிர்வாகிகள் வெங்கிடுசாமி,வெ.பெ.தமிழ்ச்செல்வி முன்னாள் நகரச் செயலாளர எஸ். வி. கிருஷ்ணராஜ்,வார்டு செயலாளர்கள் எஸ்.டி.காமேஷ்,பந்தல் பூபதி, பழனிச் சாமி, மகேந்திரன், பாலசும்பிரமணி யன், மற்றும் அதிமுக ஒன்றிய, நகர, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.








Previous Post Next Post