*மயிலாடுதுறையில் சாலை ஓரம் இறந்த பெரியவரை உறவினர்களிடம் ஒப்படைக்க சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் ஏற்பாடு!*
மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பாங்க் ரோடு சாலையில் பூட்டிக் கிடக்கும் கடையின் வாசலில் பெரியவர் ஒருவர் இயற்கை எய்து விட்டதாக சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரத்திற்கு அப்பகுதியில் வணிகம் செய்வோர் தகவல் கொடுத்தார்கள். அதனை அடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தவரின் பெயர் மீசைகணேசன் ஐயர் என்றும், அவர்களது குடும்பம் பட்டமங்கல தெருவில் சிறப்புடன் வாழ்ந்தவர்கள் என்றும் தற்பொழுது உற்றார் உறவினர்களை பிரிந்து தனியாக நண்பர்களின் உதவியோடு வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து பிராமணர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதால் அச்சமூக நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தும் வெளியூரில் உள்ள உறவினர்களிடமும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரும் வரை பிரேதத்தில் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் இருக்க உடனடியாக மேற்படி பிரேதத்தை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மாலை மரியாதை செய்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைப்பதற்கான ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார். அப்பொழுது யோகா மாஸ்டர் டி. எஸ். ஆர். கணேசன் மற்றும் சாமிநாதன், அடியாமங்கலம் முத்து, மன்னிப்ப ள்ளம் அழகர் உள்பட பலர் உடனிருந்து உதவினார்கள். மயிலாடுதுறையில் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து இதுபோன்று இறந்தவர்களை மனித நேயத்துடன் அடக்கம் செய்யவும் உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பெருமுயற்சி எடுக்கும் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரத்தின் சேவையை அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.