*வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடை பயணமாக வரும் 25 ஆயிரம் பக்தர்கள் திரும்பி செல்ல ஏப்ரல் 23ம்தேதி சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் வசதி செய்து தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*
வைத்தீஸ்வரன்கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆண்டுதோறும் சித்திரை இரண்டாவது செவ்வாய்க்கிழமை ஆண்கள் பெண்கள் குடும்பம் குடும்பமாக நடந்தே வருகை தருகின்றனர். சுமார் 25000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி காரைக்குடி பி. அழகாபுரி,கீழ சீவல் பட்டியிலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, பூண்டி, திருவலஞ்சுழி, குத்தாலம், மூவலூர், மயிலாடுதுறை வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வருகை தந்து வைத்திய நாதசுவாமி, தையல்நாயகி அம்மை, முத்துக்குமாரசாமி சுவாமிகளை வழிபாடு மேற்கொள்கின்றார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் திரும்பி செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் போக்குவரத்து துறை கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும், தென்னக ரயில்வே நிர்வாகம் திருச்சி கோட்டம் சார்பில் வைத்தீஸ்வரன் கோவில் முதல் காரைக்குடி வரை சிறப்பு டெமோ ரயில்களை இயக்கிடவும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.