கோவை பாராளுமன்ற தேர்தலில் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் பேரூராட்சி உள்ள பூத்துகளில் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை அவர்களின் வெற்றியை தடுப்பதற்காக வாக்கு செலுத்தும் இயந்திரத்தை வரிசைப்படி வைக்காமல் அதாவது 1,2,3 என்ற அகர வரிசைப்படி இல்லாமல் 3,2,1 என்ற வரிசைப்படி வைத்து மக்களை குழப்பி வெற்றியை தடுப்பதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல் பட்டு இருந்தனர் இதனை கண்டித்தும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட தொழில் பிரிவு ரவிச்சந்திரன், துணைத் தலைவர் வெள்ளியங்கிரி, பொதுச்செயலாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பூங்கொடி, ராக்கியப்பன், மகளிர் அணி தலைவி நந்தினி, விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாசிலாமணி, ராஜேந்திரன் , வீராசாமி, இளங்கோவன், மதன்குமார்,மற்றும் 50க்கும் மேற்பட்ட நகர கிளை நிர்வாகிகள் திராளாக கலந்து கொண்டனர்.