மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் : எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு!!


 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் : எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 1624 வாக்குச்சாவடி மையங்களில் 286 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  இன்று (03.04.2024) நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  வசந்தராஜ், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  கென்னடி, ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post Next Post