என்னுடைய தேர்தல் பயணத்தை முடக்க நினைக்கிறார்கள்... திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் பேட்டி

 பாஜக வேட்பாளர் முருகானந்தம், தான் தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக வெளியான வீடியோ பாதி எடிட் செய்து வெளியிடப்பட்டு இருப்பதாகவும், தன்னுடைய தேர்தல் பயணத்தை முடக்க வேண்டி செய்து இருக்கிறார்க என்றும்  இதுகுறித்து தான் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நல்லூர், மனியாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவின் திருப்பூர் தொகுதி வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் மாநில நிர்வாகிகள் பாயிண்ட் மணி,மலர்க்கொடி, அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, பாமக மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடன் சென்றனர். 

நல்லூர், மணியாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் சென்று தாமரை சின்னத்துக்கு அவர் வாக்குகள் சேகரித்தார். 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மக்கள்  நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மக்களிடத்திலே எடுத்து சொல்லி தாமரைக்கு வாக்குகள் சேகரித்து வருகிறோம். மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். 100 சதவீதம் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை வெற்றி பெறும்.
நான் பேசியதாக வெளியான வீடியோ பாதியை எடிட் செய்து பாதியை போட்டு இருக்கிறார்கள். பறக்கும்படை என்பவர்கள் தன்மையாக பேச வேண்டும். வானத்தில் இருந்து பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதை பார்த்து சும்மா என்னால் போக முடியாது.
மரியாதையாக பேசுமாறு கூறினேன். அந்த காட்சியை பார்த்து விட்டு சும்மா போக முடியாது. அதனால் மரியாதையாக பேசுங்கள் என்று கூறியதாகவும், அதில் பாதி வீடியோவை எடிட்செய்து போட்டிருக்கிறார்கள். பறக்கும் படை கேமரா மேன் வீடியோவை ஐந்து நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு நேரடியாக காணொலியை அளித்திருப்பதன் மூலம் திட்டமிட்டு இதை செய்கிறார்கள் என்பது தெரிகிறது. எனக்காக காத்திருந்து நடக்க கூடிய விஷயம் இது. என்னுடைய தேர்தல் பயணத்தை முடக்க வேண்டி செய்கிறார்கள். மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இந்த முறை தாமரை தான். 
 இதுகுறித்து நானும் புகார் அளிக்க உள்ளேன். தொடர்ந்து என்னை குறிவைத்து துன்புறுத்துவதன் காரணம் என்ன? பொதுமக்களை துன்புறுத்துகிறார்கள். விவசாயிகள், வியாபாரிகளை துன்புறுத்துகிறார்கள். அதை கேட்கும் போது உங்கள் மீது வழக்குப்போடுவதாக சொன்னார்கள். அதனால் நானும் உங்கள் மீது வழக்குப்போடுவேன் என்று கூறினேன். என்றும் இதை சட்டப்படி அணுக இருப்பதாகவும் கூறினார். 
Previous Post Next Post