ஆர்எல்வி பேரவைக்கு மாநில மகளிர் அணி அமைப்பாளராக மீனாட்சி கணேஷ் நியமனம் சிவகுமாரன் பரிந்துரையின் பேரில் ஆர்எல்வி வெங்கட்டராமன் அறிவிப்பு
புதுச்சேரி ஆர்எல்வி ஜனநாயக பேரவையில் சமீபத்தில் பழைய மாநில நிர்வாகிகள் கமிட்டியை கலைத்து விட்டு புதிய மாநில அமைப்பாளராக சிவகுமரன் நியமிக்கப்பட்டார். அப்பொழுது தொகுதி வாரியாக தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அணி அமைப்பாளர்கள் விரைவில் நியமிக்க படுவார்கள் என்று பேரவையின் நிறுவனத்தலைவர் ஆர். எல் வெங்கட்டராமன் தெரிவித்து இருந்தார் அதன் படி முதலியார் பேட்டை , உப்பளம், உருளையன்பேட்டை ஏம்பலம் ஆகிய நான்கு தொகுதி களுக்கு தொகுதி அமைப்பாளர்கள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்கள் தற்போது புதுச்சேரி ஆர்எல்வி பேரவைக்கு புதிய மாநில மகளிரணி அமைப்பாளராக மீனாட்சி கணேஷ் அவர்களை நியமிக்க, பேரவையின் மாநில அமைப்பாளர் சிவகுமாரன் பரிந்துரை செய்து இருந்தார். அதன் பேரில் இந்திரா நகர் தொகுதியை சேர்ந்த திருமதி. மீனாட்சிகணேஷ் என்பவரை புதுச்சேரி ஆர்எல்வி பேரவையின் மாநில மகளிரணி அமைப்பாளராக, நிறுவனத் தலைவர் ஆர். எல் வெங்கட்டராமன் அறிவித்தார்.
மாநில மகளிர் அணி திருமதி. மீனாட்சி கணேஷ் நியமனம் பற்றிய விபரம்
இந்திரா நகர் தொகுதியில் பூர்வீகமாக குடிருப்பவர் தான் கணேஷ் ராமசாமி என்பவர். அவரது மனைவி மீனாட்சி கணேஷ் அவர்கள் எம்பிஏ வரை படித்தவர் , படிப்புடன் சமூக பணியில் ஆர்வமும் இருந்ததால் தனது தலைமையில் மீனாட்சி கணேஷ் பொதுசேவை என்கிற இயக்கத்தை கடந்த 10 ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து.வந்துள்ளார். அதில் குறிப்பாக நெகிழியை தவிர்த்து துணிப் பைகளை பயன் படுத்த வலியுறுத்தியும், மக்களுக்கு பணை விதைகள் கொடுத்து மரம்வளர்க்க ஊக்கு வித்தும் , கொரோனா சமயத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் துணிச்சலாக செய்து வந்தது , ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் அடிப்படை தேவைகளை தெரிந்து அவர்களுக்கு உதவி புரிவது, ஊனமுற்றவர்களுக்கு இலவசமாக உபகரணங்கள் வழங்கி வந்தது , அவருக்கு சமூக பணிகளில் உள்ள ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். அப்படிப்பட்ட சமூக ஆர்வலர் ஆர்எல்வி பேரவையின் மாநில மகளிரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கை வெளியிட்டு உள்ளார்