ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் உள்ளது இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது வழக்கம்.கொரோனா காலத்தில்
தமிழக அரசு பல்வேறு நோய் தொற்று காரணங்களால் பொது மக்கள் ஒன்று கூட தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் தடைகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.கொரோனாவிற்கு பிறகு ஐந்தாண்டு காலமாக மலைக்கோவிலின் மேலே மட்டும் பௌர்ணமி கிரிவலம் சுவாமி திருவீதி உலா சென்று கொண்டிருந்தது.
தற்பொழுது சித்ரா பௌர்ணமி தினமான இன்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கிரிவலப் பாதையில் திருவீதி உலா வந்தது அதை தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பச்சைமலையை சுற்றி பௌர்ணமி கிரிவலம் தொடர்ந்து நடைபெறும்