நீலகிரி நாடாளு மன்றதொகுதி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டும் செல்லும் பணி துவங்கியது. தமிழக,கர்நாடக, ஆந்திரா, குஜராத்.கேரள மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


 இந்திய  திருநாட்டின் 18- வது மக்களவை க்கான,தேர்தல் ஏப்ரல்19 ம் தேதி (நாளை)   முதற் கட்டமாக துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டமாக, இந்திய நாடு முழுவ தும் நடைபெற உள்ளது.முதற்கட்டமாக துவங்கும் தமிழக நாடாளுமன்றத் தேர்த லுக்கான பிரச்சாரங்கள் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்து, நாளை 19ஆம் தேதி வாக்குப்பதிவு துவங்க உள்ளது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பவானி சாகர் சட்டமன்ற தொகுதியில், 295 வாக்கு சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை சத்தியமங் கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 24 மணி நேரமும்,ஆயுதம் தாங்கிய  போலீஸ் கண்காணிப்பில், சீல் வைக்கப்பட்ட அறை யில் இருந்து (Strong room) எடுக்கப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரங்கள், பவானி சாகர் சட்டமன்ற தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் தலைமை யில்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வட்டாட்சியர் மாரிமுத்து மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் ,அரசியல் கட்சி பிரமு கர்கள் முன்னிலையில்,மண்டல வாரி யாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக் குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், 295 வாக்கு சாவடி மையங்கள்,29 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு மண்டல அலுவலர் கள் தலைமையில், வாக்குப்பதிவு இயந் திரங்கள் கொண்டும் செல்லும் வாகனங் கள் ஜிபிஎஸ் கருவி மற்றும் காவல் கட்டு ப்பாட்டு அறை, மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட வயர் லெஸ் கருவி பொருத்தப்பட்டு, பயன்படுத் தபடுகின்றன.

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னனு வாக்கு இயந்திரங்கள், கொண்டு செல் லும் பணியில்,ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜா ரண வீரன் தலைமையில், தமிழக, கர்நாடக கேரள, ஆந்திர மாநில போலீசார், பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Previous Post Next Post