மீண்டும் வெள்ளக்காடாக போகும் தென் மாவட்டங்கள் - தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று இரவு முதல் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை.!!


 மீண்டும் வெள்ளக்காடாக போகும் தென் மாவட்டங்கள் -  தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி  மாவட்டங்களுக்கு இன்று இரவு முதல் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை.!! 

இலங்கை அருகே உருவாகியுள்ள புதிய காற்று சுழற்சியால், நெல்லை மற்றும் துாத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில், 3 நாட்கள் கனமழை பெய்யும் என்று, வானிலை ஆராய்ச்சி ளார் ராஜா தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது: இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகு தியில், புதிய காற்று சுழற்சி உருவாகியுள் ளதால் தென் தமிழக மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 3 புதிய காற்று சுழற்சி

காரணமாக துாத்துக் குடி, நெல்லை, ராம நாதபுரம் ஆகிய தென் கடலோர மாவட்டங் களில் இன்று (11ம் தேதி) இரவு முதல் கனமழை பெய்யும். தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட் டங்களில் நாளை (12ம் தேதி) கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. துாத் துக்குடி, திருச்செந் துார், காயல்பட்டினம், உவரி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்க ளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். காயல் பட்டினம் பகுதியில் நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post