இந்திய நாட்டின் பதினெட்டாவது மக் களவைக்கான,பொதுத்தேர்தல்,இன்று முதற் கட்டமாக,தமிழகம், புதுச்சேரி உட்பட, 21 மாநிலங்களில் 102 மக்கள வைத் தொகுதிக்கான,பொதுத் தேர் தல்இன்றுகாலை முதல்துவங்கி நடை பெற்று வருகிறது.இதன் ஒரு பகுதி யாக, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி க்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில்,மாலை 3 மணி நிலவரப் படி 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள் ளன.இன்று நடைபெற்ற பொதுத் தேர் தலில்,குறிப்பாக,சத்தியமங்கலம்பவா னிசாகர்பகுதிகளில்,புதிய இளம்வாக் காளர் மற்றும் மூத்த குடிமக்கள்வாக்க ளிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
மேலும் வெயிலின் தாக்கம் மிக அதிக மாக உள்ள சூழலில் கூட, வாக்காளர் கள், தங்கள் ஜனநாயக கடமையாற்ற, நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து, தங்கள் வாக்குகளை செலுத்தினர். மேலும் புதிய வாக்காளர்கள்தங்கள் வயதுடையஅனைவரும் வாக்களித்து 100% இலக்கை அடைய ஒத்துழைக்க கேட்டுக் கொண்டனர்.
ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு இய ந்திரத்தில்ஏற்பட்ட பழுது காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு தடை பட் டாலும்தொடர்ந்துவாக்குப்பதிவுசீராக நடைபெற்று வருகிறது இதனை பவா னிசாகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் உமா சங்கர் பல் வேறு வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, வாக் காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க, போதிய வசதிகள் செய்து தரப்பட்டு ள்ளனவா? எனவும், பாதுகாப்பு நடவடி க்கைகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.