திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தாரணி என்ற பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் 250 வது ரேங்க் பெற்று இருக்கிறார்.
திருப்பூர் லிட்டில் பிளவர் பள்ளியில் பள்ளிப்படிப்பும், மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் பல் மருத்துவம் படித்து இருக்கிறார். இவரது தந்தை முருகானந்தம்
திருப்பூரில் துணிக்கடை வைத்து இருக்கிறார். தாயார் சோழன்மாதேவி திருப்பூர் இடுவம்பாளையம் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். பல் மருத்துவம் முடித்த தாரணி 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். 4 முறை தேர்வு எழுதிய நிலையில் இரண்டு முறை முதல் நிலைத்தேர்விலும், மூன்றாவது முறை நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்ற நிலையில், நான்காவது முறையாக முயன்று ஐ.ஏ.எஸ்.,ஐ தன் வசமாக்கியுள்ளார். இதுகுறித்து ஐ.ஏ.எஸ்., வென்ற தாரணி கூறுகையில்,’ கோச்சிங் எதுவும் செல்லவில்லை. வழிகாட்டுதல்கள் மட்டும் பெற்றேன். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்., வெற்றி சாத்தியம் என்றார்.