தூத்துக்குடி : ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் - ஒருவர் கைது.!
தூத்துக்குடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தாளமுத்து நகர் பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ய்பபட்டுள்ளது. இதனை சட்ட விரோதமாக லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடியில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாளமுத்து நகர் கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த முத்து மகன் சங்கர் (28) என்பவரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் டிஎம்பி காலனியைச் சேர்ந்த செல்வம் என்பவரை தேடி வருகின்றனர். 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார். தூத்துக்குடியில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.