இன்று (06.04.2024-சனிக்கிழமை) சனி பிரதோஷ நாளை முன்னிட்டு, மழை வேண்டி, 1008 குடங்கள் பால் ஊற்றி வழிபாடு..பவானிசாகர் பகுதியில், கோடை வெப்பம் அதிகரித்து வரு கி.றது. போதிய கோடை மழையும் பெய்யவில்லை.இதனால், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 47 அடி யாக சரிந்து குடிநீர் தட்டுப்பாடு அதி கரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மழை பெய்ய வேண்டி,பல்வேறு ஊர் களில் மக்கள் தங்கள் இஷ்ட தெய்வ ங்களை வேண்டியும், வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை சனிப் பிரதோஷ ம் என்பதால்,பவானிசாகர், டணாய்க் கன்கோட்டை, திருக்கோயிலில்,உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் இன்று (06.04.2024-சனிக் கிழமை) காலையில் 500 லிட்டர்பால்,மாலையில்,ஸ்ரீ சோமே ஸ்வரர், மற்றும் நந்தி பெருமானுக்கும் 508 லிட்டர் பால் என 1008 லிட்டர் பால் ஊற்றி, சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற உள்ளது. இதில் இன்று காலை ஆன்மீக பக்தர்கள், ஆன்மீக மன்றத்தினர்,பக்தர்கள்மற்றும் பொது மக்களும் பங்கேற்று,மழை வேண்டி, 1008 லிட்டர் பால பிஷேக வழிபாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,சிறப்பு வழிபாடு நடத்தினர்.