காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் - வருமான வரித்துறையை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்


 காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் - வருமான வரித்துறையை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று ரூ.1,800 கோடி அபராதம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், வருமான வரி விவகாரம் தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ். முரளீதரன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, சேவா தளம் மாவட்ட தலைவர் ராஜா, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர் பாண்டி, ராஜன், ஐசன் சில்வா, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் பிரீத்தி, கனியம்மாள், விவசாயப் பிரிவு பாலசுப்பிரமணியம், கலைப்பிரிவு செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு வருமானவரித் துறைக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Previous Post Next Post