புஞ்சைபுளியம்பட்டியில், உரிய ஆவணங்கள் இன்றி, கொண்டு வந்த பணம் பறிமுதல் - தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் நடவடிக்கை..


 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி அறிவிக் கப் பட்ட நிலையில், நாடு முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் உடனடி யாக அமலுக்கு வந்தன. தமிழகத்தில் வரும்ஏப்19ம் தேதி தேர்தல் நடைபெறு ம் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி யில், தேர்தல் பறக்கும் படையினர்  மற்றும் தேர்தல் நிலையான கண் காணிப்பு குழு மற்றும் வீடியோ கண் காணிப்பு குழுவினர் ரோந்து பணி யில் ஈடுபட்டு வந்தனர். இதனிடைய நேற்று நள்ளிரவில், புஞ்சை புளியம் பட்டி டானா புதூர் சோதனை சாவடி யில், தேர்தல் நிலையான கண் காணி ப்பு குழுவினர் தாளவாடி துணை வட் டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமையில்,வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழி யாக வந்து கொண்டிருந்த கார் ஒன் றை நிறுத்தி, சோதனையிட்ட போது, காரில் இருந்தவர்களிடம் 1லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரி ய வந்தது. விசாரணையில், பணம் கொண்டுவந்தவர், காரைக் குடியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பதும், அவர் கோவையில் நிலம் வாங்குவத ற்காக, பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் ஆணையம் விதி முறையின் படி, தேர்தல் நிலையான கண்காணி ப்பு குழுவினர்,பணத்தை பறிமுதல் செய்து, பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் உமா சங்கரிடம்,பணத்தை ஒப்படைத் தனர்.

தேர்தல் அதிகாரிகள், பணத்தை சரிபார்த்து,சீல் வைத்து, பணத்தை சத்தியமங்கலம் அரசு கிளை கருவூல த்தில்ஒப்படைத்தனர்.பணம்கொண்டு  வந்தவர் தேர்தல்  முடிந்த பின், உரிய ஆவணங்களை கொண்டு வந்து ,பண த்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்த னர்.



Previous Post Next Post