தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி மாநில செயலாளர் குற்றசாட்டு

சிறுபான்மை மக்களை நசுக்குகின்ற வேலையை செய்த பா.ஜ.க.விற்கு துணை போனது அ.தி.மு.க
தி.மு.க.சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி மாநில செயலாளர் குற்றசாட்டு


பொய்யான பிரச்சாரங்களை தொடர்ந்து பா.ஜ.க.அரசு பரப்பி வருவதாகவும்,வரும் நாடாளுமன்ற தேர்தல் மக்கள் விரோத அரசுக்கும்,மக்களுக்கான இந்தியா கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம் என தி.மு.க.சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி மாநில செயலாளர் சுபேர்கான் கோவையில் , தெரிவித்துள்ளார்..
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து,பிரச்சாரம் செய்ய தி.மு.க.சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி மாநில செயலாளர் சுபேர்கான், கோவை வந்தார்.இந்நிலையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி மற்றும் நிர்வாகிகளிடையே ஆலோசணையில் ஈடுபட்ட அவர்,பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர்,சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக தி.மு.க.என்றுமே இருக்கும் என கூறிய அவர்,சி.ஏ.ஏ.,மதமாற்ற சட்டம்,பொது சிவில் சட்டம்,முத்தலாக் சட்டம் போன்ற சிறுபானமை மக்களை நசுக்கின்ற வேலையை பா.ஜ.அரசு செய்து வருவதாக கூறினார்..இதற்கு அ.தி.மு.க.வும் துணை போனதாக கூறிய அவர்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கு சிறுபான்மை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்..இந்த்தேர்தலில் தி.மு.க.வேட்பாளரை எதிர்த்து போட்டியுடும் அ.தி.மு.க.மற்றும் பா.ஜ.க.வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என உறுதி தெரிவித்தார்..குறிப்பாக நடைபெறும் தேர்தல் மக்கள் விரோத ஆட்சிக்கும் மக்களுக்கான இந்தியா கூட்டணிக்கும் நடக்கும் யுத்தம் என்றே கூறலாம் என தெரிவித்தார்..சிறுபான்மையினருக்கு தி.மு.க.வில் .முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,கட்சியில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அதற்கு தாமே ஒரு உதாரணம் என கூறினார்.. கருத்து கணிப்புகளை பொறுத்த வரை வட மாநில ஊடகங்கள் தவறான பொய் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும்,பிரச்சாரம் தற்போதுதான் துவங்கி உள்ள நிலையில், ஒரு பொய்யான கருத்து கணிப்புகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.எதிர் கட்சகள் மீதான அடக்கு முறை மோடி அரசின் பயத்தை வெளிப்படுத்துவதாக கூறிய அவர்,இன்னும் அடக்குமுறைகளை பயன்படுத்த அமலாக்க துறை,தேர்தல் ஆணையம் என அனைத்து துறைகளும் மத்திய அரசு கையிலெடுத்தால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை என தெரிவித்தார்..இந்த சந்திப்பின் போது பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள் .அபுதாஹிர் மௌலவி அப்துல் ரஹ்மான், வழக்கறிஞர் இஸ்மாயில், மெட்டல் சலீம், K.U. அபுதாஹிர்,அப்துல் நைமு பாஷா உட்பட பலர் உடனிருந்தனர்.
Previous Post Next Post