நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள். சத்தி வட்டாச்சியர் அலுவலகத்தில், ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு.


19-நீலகிரி பாராளுமன்ற (தனி)தொகு திக்குட்பட்ட, 107- பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட, 354 மின்னனு வாக்குபதிவு யூனிட்,(Ballat) 354 கட்டுபாட்டு இயந்திரம், (Control unit) 383 விவிபேட் (V.V.PAT) உள்ளிட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தேர்தல் இருப்பு அறையில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, 

பவானி சாகர் சட்டமன்ற தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் தலைமையில், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மாரிமுத்து மற்றும் துணை வட்டாச்சியர் ராக்கி முத்து மற்றும் திமுக சத்தி நகர செய லாளரும், சத்தி நகர் மன்ற தலைவரு மான ஆர்.ஜானகி ராமசாமி, பவுஜில், அதிமுக முன்னாள் சத்தி நகரச் செய லாளர் எஸ்.வி.கிருஷ்ணராஜ், கருப்பு சாமி,நாராயணன், பந்தல் பூபதி மீன் குமார்,சிவராம் மற்றும் இந்தியதேசிய காங்கி ரஸ் கட்சி, சத்தி நகரச் செயலா ளர் ச.ம.சிவக்குமார், பாரதிய ஜனதா கட்சி சத்தி நகரச் செயலாளர் செல்வ ராஜ் ஆகியோர் முன்னிலையில், சத் திய மங்கலம் வட்டாட்சியர் அலுவலக இருப்பு அறையில், (strong room) 24 மணிநேரமும்,ஆயுதம்தாங்கிய,போலீ சார் கண்காணிப்பில், பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,107. பவானிசாகர் தொகுதி தேர்தல் பிரிவு அதிகாரிகள், காவல் துறையினர் பங்கேற்றனர்.



Previous Post Next Post