கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்


 கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த  கண்ணன் இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு இயந்திர தீப்பெட்டி ஆலை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். அந்த ஆலையில் பணியாளர்கள் இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர்.  இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று இரவில் ஆலையில் உள்ள இயந்திரத்தில் திடீரென தீ பிடித்து  பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு படை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ தொடர்ந்து எரிந்ததால் தீயை அணைப்பதற்கு டிராக்டர் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது‌ . நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்..தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.சம்பவ இடத்தை கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணபெருமாள் , வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும் சம்பவ இடத்தை நேஷனல் சிறு உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் பார்வையிட்டார்
.

Previous Post Next Post