கோபி அருகே இறந்தவர்களை அடக்கம் செய்ய மயான வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்..
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரநகர் பகுதியில் மயானம் மற்றும் குடிநீர் வசதி கேட்டு கோபியிலிருந்து நம்பியூர் செல்லும் சாலையில்
மூணாம்பள்ளி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் காரணமாக கோவை செல்லும் சாலையில்1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன
இந்த மறியல் குறித்து அப்பகுதி பொதுமக்கள் பேசியபோதுநாங்கள் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம் என்றும் எங்களுக்கு போதிய மயான வசதி இல்லை என்றும் ஏற்கனவே இருந்த மயானத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர்
அந்த கட்டிடங்களை இடித்து மயானத்திற்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும்,மேலும்
இப்பகுதியில் நான்கு புறமும் சாலைகள் சந்திப்பதால் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால் நான்கு சாலைகளிலும் வேகத்தடை ஏற்படுத்தி நிழல் குடைகளை அமைத்து தர வேண்டும் எனவும்,எங்கள் பகுதிக்கு
சீரான குடிநீர் விநியோகம் செய்திடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணனுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கோபி- நம்பியூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது....
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் காவல் துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அடுத்த 7 நாட்களுக்குள் உங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்த பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்