பல் சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரஃபி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை

பல் சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரஃபி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர்  கெஜ்ரிவால் கைது செய்திருப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலையாகும்
இந்தியாவில் ஜனநாயக தேர்தல் திருவிழா நடைபெறும் இந்த நேரத்தில் இந்த கைது என்பது மோடிக்கு தோல்வியை பயத்தை காட்டுகின்றது உச்சநீதிமன்றம் இதில் தானாகவே முன்வந்து தலையிட்டு  கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் சுதந்திரமான தேர்தல் நடத்திட ஆவணம் செய்ய வேண்டும் என்று   பல் சமய நல்லுறவு இயக்கம் கேட்டுக்கொள்கிறது 
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அமலாக்கத்துறை வருமானவரித்துறை சிபிஐ போன்ற துறைகள்  கொண்டு வர வேண்டும் என்றும தெரிவித்துக் கொள்கின்றேன்  ஜனநாயக தேர்தலில் நேரடியாக களத்தில் பிஜேபி கட்சி தேர்தலை சந்திக்க வேண்டும்
எதிர்க்கட்சிகளை பயமுறுத்தும் நோக்கத்திலே  கைது சம்பவம் நடைபெறுகிறது இதை ஏற்புடையதல்ல என்பதை இந்த கண்டன அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  அறிக்கை வெளியிட்டு உள்ளார் 
Previous Post Next Post