தூத்துக்குடி : பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம் - வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 36.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் 20.03.2024 4 27.03.2024 ໙ (23.03.2024 0 24.03.2024 ஆகிய பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் வேட்பு மனுக்கள் பெறப்படவுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரின் வேட்புமனு, படிவம் 2A இல் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேற்கண்ட வேட்பு மனு படிவம் 2A வினை ECI/CEO இணையதளத்தில் (www.eci.gov.in & www.elections.tn.gov.in) @ υπ. மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு படிவம் 2A தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
20.03.2024 ( 27.03.2024 2 (23.03.2024
24.03.2024 ஆகிய பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணிக்குள் இடைப்பட்ட எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாளில் முற்பகல் 11:00 மணிக்கு முன்பும், பிற்பகல் 3:00 மணிக்குப் பின்பும் வேட்பு மனு பெறப்படாது.
வேட்பாளரின் வேட்பு மனுவினை முன்மொழிபவர்(கள்), வேட்பாளர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்தத் தொகுதியைச் சேர்ந்த (தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி) வாக்காளராக இருக்க வேண்டும். வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய / மாநில கட்சியை சார்ந்த வேட்பாளராக இருந்தால் ஒரு நபரும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி வேட்பாளராகவோ அல்லது சுயேச்சை வேட்பாளராகவோ இருந்தால், 10 நபர்களும்
முன்மொழிபவர்களாக இருக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு 3 வாகனங்கள் மட்டுமே, அதுவும் மேற்படி அலுவலகத்தின் 100 மீட்டர் எல்லைவரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வேட்பாளர் மற்றும் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட, ஆனால் நான்கு வேட்புமனுக்களுக்கு மிகாமல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுவுடன், படிவம் 26 இல் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், நிலுவை கடன்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான விபரங்களை குறிப்பிட்டு உறுதிமொழி ஆணையரிடம் சான்றொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், காப்புத்தொகை, மூன்று மாதக்காலத்திற்குள் வெள்ளை நிற பின்னணியுடன் எடுக்கப்பட்ட (Stamp Size Photo 2cm x 2.5cm ) புகைப்படம், அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளராக இருப்பின் படிவம் A மற்றும் B, தேர்தல் செலவினங்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு விபரம், பட்டியலின வகுப்பினர் அல்லது பட்டியலின பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த வேட்பாளராக இருப்பின் சாதிச்சான்று ஆகியவற்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர், வேட்புமனுவை தாக்கல் செய்யும் நாளுக்கு குறைந்தது ஒரு நாளுக்கு முன்னதாக தேர்தல் செலவினங்களுக்காக வங்கி கணக்கு துவக்கப்பட வேண்டும். வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, இந்தக் வங்கி கணக்கு எண்ணை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அனைத்து தேர்தல் செலவினங்களும் இந்த வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே வேட்பாளர்களால் செய்யப்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்காக செலவிடப்பட உள்ள அனைத்து தொகையும் அது வேட்பாளரின் சொந்த பணமோ அல்லது வேறு எந்த வகையில் பெறப்பட்டாலும், இந்த வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்படவேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.95 இலட்சம் வரை தேர்தலுக்காக செலவு செய்யலாம்.
நாடாளுமன்ற தொகுதிக்கு பொது வகுப்பினைச் சார்ந்த வேட்பாளர்கள்
காப்புத்தொகையாக ரூ.25,000/- பட்டியலின வகுப்பினர் அல்லது பட்டியலின பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர் எனில் காப்பு தொகையாக ரூ.12,500/- செலுத்த வேண்டும். வேட்பாளரின் காப்பு வைப்புத் தொகை, வேட்புமனுவை தாக்கல் செய்யும் நாளிலோ அல்லது 27.03.2024 அன்று பிற்பகல் 03:00 மணிக்கு முன்னரோ செலுத்தப்பட்டிருக்க வேண்டும். காப்பு வைப்புத் தொகையை பணமாகவோ அல்லது அரசாங்க கருவூலத்தில் செலுத்து சீட்டு தாக்கல் செய்வதன் மூலமாகவோ தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம்.
காப்புத்தொகையினை காசோலை / வங்கி வரைவோலை மூலம் செலுத்த இயலாது.
மேற்படி பெறப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் 28.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படவுள்ளது. மேலும், வேட்புமனுக்கள் தொடர்பாக கூடுதல் விபரங்கள் தேவைப்படின் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவினை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி
பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.