விளாத்திகுளம் அருகே குளத்தூரில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு!
குளத்தூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.23.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் குருநாதன், ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல்,
மாவட்ட பிரதிநிதி செல்வ பாண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கவுன்சிலர் செந்தூர் பாண்டியன், முருகேசன், பேச்சிமுத்து, செல்வின், விருசம்பட்டி மாரியப்பன், திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, கிளைச் செயலாளர்கள் சுடலைமுத்து, சொரிமுத்து, முனியசாமி, மாரியப்பன், அம்புலிங்கம், மந்திர ஆசாரி, செங்கப்படை மாரியப்பன், குளத்தூர் காசிராஜன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ஆனந்தராஜ், நன்னியராஜ், இசக்கி என்ற ஜோதி, மோகன்ராஜ், முத்து செல்வி, சாந்தி, ஜீவிதா, கெங்குராஜன், சாந்திகனி, ஊராட்சி செயலாளர் காந்தி ராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.