தூத்துக்குடி இளைஞர் உவரியில் கழுத்து அறுத்து படுகொலை.! : - நண்பர் கைது, மேலும் இருவருக்கு போலீஸ் வலை.!
திசையன்விளை நவ்வலடி அருகே கோடாவிளை கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மஸ்தான் பள்ளி வாசலின் இடது புறத்தில் கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த உவரி இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) ஆனந்த குமார், எஸ்ஐ நதியா மற் றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஒரு வாலிபரின் கழுத்து பகுதி பயங்கரமாக அறுக்கப்பட்டும், நெஞ்சிலும் முதுகிலும் பல கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் அவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த கில்டாப் மகன் ஜஸ்டின் (24) என்பது தெரியவந்தது. இவர் திசையன்விளை கடல்சார் கல்லூரியில் படித்து வந்தார்.
திரேஸ்புரத்தில் ஒரு பெண்ணுக்கும், இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து சில மாதங்களில் திருமணம் நடக்க உள்ளதாக தெரிய வந்தது. இந்நிலையில் உவரி கடற்கரையில் அவர் கொலை
செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அவரது செல்போண் எண் ணிற்கு வந்த அழைப்புகள், பேசிய எண்கள் குறித்து போலீசார் விசாரித்ததில் ஜஸ்டினை அவரது நண்பரான தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியை சேர்ந்த கணேஷ் (22) என்பவரும், மற்றொரு வாலிபரும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கணேசை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது: நானும், ஜஸ்டினும் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். சமீபத்தில் அவர் கப்பலுக்கு வேலைக்கு செல்ல ஆசைப்படுவதாக தெரிவித்தார். இதற்காக திசையன்விளையில் உள்ள மரைன் கல்லூரியில் பயிற்சிக்கு சேர்ந்தால் சான்றிதழ் கிடைக்கும். அதற்கு ரூ.3,600 செலவாகும் என்று நான் கூறியதை கேட்டு ஜஸ்டின் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து பணத்துடன் வந்த ஜஸ்டினை திசையன் விளையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தேன். அங்கு நாங்கள் 2 பேரும் மது குடித்தோம். அப்போது ஜஸ்டின் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது நண்பரான மற்றொரு தூத்துக்குடி வாலிபரை போன் செய்து வர வழைத்தேன்.
பின்னர் நாங்கள் 3 பேரும் கோடாவிளை கடற்கரைக்கு சென்று அங்கு வைத்தும் மது அருந்தினோம். அப்போதும், ஜஸ்டின் எங்களை அவதூறாக பேசினார். இதனால் என்னுடன் வந்த வாலிபர் ஜஸ்டினின் கழுத்தை கத்தியால் அறுத்து, மார்பிலும் குத்தினார். பின்னர் நாங்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கணேஷ் கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தப்பி யோடிய மற்றொரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது தாயிடம் பணம் அனுப் பச் சொல்லி, காலையில் ஊருக்கு வருவதாக தெரி வித்த ஜஸ்டின் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.