*மயிலாடுதுறை திரு.வி.க காய்கறி மார்க்கெட்டில் பூட்டிக்கிடக்கும் கழிவறையால் அவதி உடனே திறக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான திரு. வி.க காய்கறி மார்க்கெட் வளாகத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன.தினமும் வருகைதரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கான கழிவறை கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மூடப்பட்டிருப்பதால் சிறுநீர் கழித்தல் மற்றும் இயற்கை உபாதைகளை போக்க இடமில்லாமல் மிகவும் கஷ்டமாக உள்ளது என்று அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அருகிலுள்ள பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதால் கல்லூரிக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளின் மத்தியில் பல்வேறு சங்கடங்களும் சுகாதார சீர்கேடும் நோய் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அருகில் கோவில் உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இக்கழிவறையை கடந்த காலங்களில் தனியாரும் பிறகு நகராட்சியும் நிர்வகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கழிவறையை ஏலம் எடுக்க நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை மிகவும் அதிகமான காரணத்தினால் ஏலம் எடுக்க தனியார் யாரும் முன் வராத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ மக்களின் நலன் மட்டுமே முக்கியம் என்னும் நிலையை உணர்ந்து குறிப்பாக அப்பகுதியில் வியாபாரம் செய்வோம் மட்டுமல்லாமல் துலா கட்ட பகுதி பெரிய கடை தெரு, மகாதானத்தெரு, ராஜன்தோட்டம், விளையாட்டரங்கம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கல்லூரி வரை பெரும்பாலானவர்கள் இக்கழிவறையையே பயன்படுத்தி வருகின்ற காரணத்தினால் உடனடியாக பூட்டி க்கிடக்கும் கழிவறையை திறந்து பொது மக்களின் இயற்கை உபாத கஷ்டத்தை போக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.