புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காரைக்காலில் கருத்தரங்கம்....
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காரைக்காலின் சமத்துவ வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறைகள் எனும் தலைப்பில் காரைக்கால் வணிகர் சங்க கட்டடத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கழகத்தின் தலைவர் பேராசிரியர்
மு ராமதாஸ் அவர்கள் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் கழகத்தின் சேர்மன்
ஆர் எல் வெங்கட்ராமன்
புதுச்சேரி மாநிலப்
பொதுச் செயலாளர் பேராசிரியர்
எ.மு.ராஜன், காரைக்கால் பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன், கலியமூர்த்தி, சூர்யா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
ஆசிரியர்
கனக சேகரன் வரவேற்புரை வழங்கினார். கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்டத் தலைவர் கணபதி சுப்பிரமணியன் செய்திருந்தார்.
இக்கருத்தரங்கில் புதுச்சேரியில் இருந்து உதவிச் செயலாளர் திருமதி ஆண்டாள் , ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் அனந்தகுமார் , சந்திரமௌலி மற்றும் திருமதி விமலா பெரியாண்டி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் பொருளாதார அறிஞர்களும் திரளாகக் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர். சிறப்பித்தனர்