புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணிக்கு பாராட்டு விழா

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணிக்கு  பாராட்டு விழா நடைபெற்றது
 புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணிக்கு பாராட்டு விழா தட்டஞ்சாவடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் பேராசிரியர்
மு. ராமதாஸ் தலைமை தாங்கினார் சேர்மன் R.L.வெங்கட்ராமன் வரவேற்று பேசினார். பொருளாளர் முனைவர் பெண்ணியம்
செல்வகுமாரி
 மகளிர் அணி நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை ஆற்றினார்.
 மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர்
எ. மு.ராஜன் வாழ்த்துரையாற்றினார் 
 மகளிர் அணியின் தலைவியாக வீராம்பட்டினத்தைச் சார்ந்த திருமதி.விமலா பெரியாண்டி அவர்களும் துணைத் தலைவர்களாக திருமதி.ஃபரீதா திருமதி.அன்பரசி ஆகி வரும் செயலாளர்களாக செல்வி.சக்தி  மீனாட்சி ஆகியோரும் இணை செயலாளர்களாக செல்வி.கலைமணி மற்றும் திருமதி.மாலதி ஆகியோரும் துணைச் செயலாளர்களாக திருமதி.தனபாக்கியம் ஆகியோரும் பொருளாளராக திருமதி.வசந்தியும் நியமனம் செய்யப்பட்டனர் அவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.
 நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மாநிலச் செயலாளர் பரந்தாமன் நன்றி கூறினார்.
 இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர்  சந்திரன் உதவி செயலாளர் ஆண்டாள் இணைச் செயலாளர் பெருமாள், ரவிகுமார், கோமதி, கௌரி , சுலோச்சனா 
 மாநில நிர்வாகிகளும் உயர் மட்ட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Previous Post Next Post