புதுச்சேரி சிறுமி ஆர்த்தி பாலியல் படுகொலை
இந்திய சுயராஜ்ய கட்சி கடும் கண்டனம்
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி ஆர்த்தி மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு படுகொலை செய்த கருணாஸ் மற்றும் விவேகானந்தன் போன்ற குற்றவாளிகளை உடனடியாக கால தாமதம் செய்யாமல் தூக்கிலிட வேண்டும் என்று இந்திய சுயராஜ்ய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற குற்றவாளிகள் மீண்டும் உருவாகாமல் இருக்க இந்திய அரசு கடுமையான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகின்றேன். என்று இந்திய சுயராஜ்ய கட்சி நிறுவனர் ராம்குமார் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்