திருச்சியில் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் 02-03-2024 ஆம் தேதி மங்களம் மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது இதில்  தலைமை ஆர்.ஆர்.கோபால்  மாநில தலைவர் சிறப்புரை மானிய ஸ்ரீ வேதாந்தம் நிறுவனர் வாழ்த்துரை வழங்கியவர்கள்  செல்லமுத்து மாநில செயல் தலைவர்  கிருஜா சேசாத்திரி மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர்.கணேஷ்  மாநில இணைப் செயலாளர் வழக்கறிஞர்.விஜயகுமார் வழக்கறிஞர்.சந்திரசேகர் ராமசுப்பு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் நன்றியுரை  ஐயப்பன் நிகழ்ச்சி அமைப்பாளர் இந்நிகழ்ச்சியில் 1200 க்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1) கோவில்களில் ஆகாம பூஜைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அறநிலைத்துறை செயல்படக்கூடாது என்றும் பாரம்பரிய முறைப்படி தான் பூஜை நடக்க வேண்டும் என்று செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது 2) கோவில்களில் அசைவ உணவு உண்பது மாற்று மத நூல்களை சத்தமாக படிப்பது இந்து கலாச்சாரத்திற்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரான செயலாகும் இதை கண்டிப்பதோடு அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலைத்துறையை கேட்டுக் கொள்கிறது 3) ராமேஸ்வரம் கடலில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்கும் பிண்டம் வைபப்பதற்கு தமிழக அரசு 200 ரூபாய் முதல் 400 ரூபாய் என்று கட்டணம் விதிப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு  இச்செயல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது 4) கோவில்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களையும் தெப்பகுளத்தையும் மீட்க வேண்டும் என்றும் மேலும் கோவை கோனியம்மன் கோவிலில் தெப்பக்குளம் மீட்கப்பட வேண்டும் என்றும் செயற்குழு கேட்டுக் கொள்கிறது 5) பிற நாட்டினர் நமது நாட்டில் சட்டவிராதமாக  நுழையும் மக்களை தடை செய்யும் விதமாக பாரத அரசு இயற்றிய சி ஏ ஏ சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று செயற்குழு கேட்டுகொள்கிறது 6) கிராம கோவில் பூசாரிகளுக்கு சம்பளம் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் மேலும் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட கோவில் நிலங்களையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் செயற்குழு கேட்டுக்கொள்கிறது இத்தீர்மானங்கள் உள்பட முக்கிய  25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Previous Post Next Post